மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 15 ஆயிரம் அலுவலர்கள்

கோவை, ஏப். 6: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 15,805 அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் தபால் வாக்கினை செலுத்தும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்த அந்தந்த பயிற்சி மையத்தில் இதற்கென பிரத்யேக மையம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பிரத்யேக மைத்தின் மூலமாக மட்டுமே தங்களது தபால் வாக்கினை செலுத்த முடியும்.

அஞ்சல் துறையின் மூலமாக தபால் வாக்கினை அனுப்ப இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்த பாராளுமன்ற தொகுதியில் அவர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அவர்களுக்கு அவர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும் வாக்குசாவடியிலேயே இவிஎம் இயந்திரம் மூலமாகவே வாக்குகளை செலுத்த ஏதுவாக தேர்தல் பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் தங்களது வாக்கினை பயிற்சி மையத்தில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, 10 பயிற்சி மையங்களில் நாளை (7ம் தேதி) தபால் வாக்கு செலுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தவுள்ளனர்.

இரண்டாவது மறுபயிற்சி வகுப்பு வரும் 13-ம் தேதி நடக்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் போது, நாளை (7-ம் தேதி) நடக்கும் பயிற்சி வகுப்பில் வாக்களிக்க தவறியவர்கள் மற்றும் வேறு மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் பணி அலுவலர்கள், பிற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் ஆகியோர் வாக்களிக்கலாம். மேலும், இந்த இரண்டு நாட்களிலும் வாக்கு செலுத்த தவறிய வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிற அலுவலர்கள், வேறு மாவட்டத்தை சேர்ந்த வாக்களர்கள் ஆகியோர் தங்களின் தபால் வாக்குகளை செலுத்தும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பிரத்யேக மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தின் மூலம் தபால் வாக்கினை செலுத்தலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு