மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பனிப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கத்தால், சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சளி, இருமல், காய்ச்சலால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிசிச்சைக்கு வரும் மக்கள் அதிகரித்துள்ளனர்.காய்ச்சலை தடுக்க சித்தா பிரிவில் நிலவேம்பு மற்றும் கபசூர குடிநீர் தினசரி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘பகலில் மிதமான குளிரும், இரவில் கடும் குளிரும் வீசுகிறது. வெயிலின் தாக்கமும் உள்ளது. சீதோஷ்ண மாற்றத்தால் சளி மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் தான் வார்டில் அதிகம் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளன. அதே போல் சித்தா பிரிவில் கசாயம் வழங்கப்படுகிறது,’ என்றனர்….

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்