மாவட்டத்தில் கனமழை அதிகபட்சமாக நேற்று காஞ்சிபுரத்தில் 184 மி.மீ மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை இரவு வரை பெய்தது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 184 மி.மீ மழை கொட்டித் தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக வரும் இரு நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்,நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர், காலை 9 மணி முதல், மழை மெல்ல மெல்ல பெய்யத் துவங்கியது. தொடர்ந்து இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு , தாண்டவராய நகர், முல்லை நகர், மின்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் வேறு இடங்களுக்குத் சென்றனர். நகரத்தின் அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கீழ்கதிர்பூர் வாக்குப் பதிவு மையமான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நேற்று காலை காஞ்சிபுரத்தில் அதிகப் படியாக 184 மி.மீ மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு நிலவரம் (மி.மீ)காஞ்சிபுரம்    184.00ஸ்ரீபெரும்புதூர்    89.40உத்திரமேரூர்    72.80வாலாஜாபாத்    68.90செம்பரம்பாக்கம்    48.00குன்றத்தூர்    41.00…

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்