மாவட்டத்தில் கனமழையால் மண் சரிவு: சாலை துண்டிப்பு

*மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு*456 நிவாரண முகாம்களும் தயார்ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலை  துண்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி சுமார் 20 நாட்களுக்கு மேல் பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், சில இடங்களில் வாகனங்களின் மீது மரங்கள் விழுந்து மூவர் காயம் அடைந்தனர். மேலும், பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன. தற்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ள மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளிலும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்கு ஏற்றார்போல், நேற்று முன்தினம் முதல் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கன மழை பெய்தது வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் லேசான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஊட்டி அருகேயுள்ள மீக்கேரி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஊட்டி அருகேயுள்ள கல்லக்கொரை பகுதியில் நீரோடை தூர் வாரப்பட்டுள்ளதையும், விவசாய நிலங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, கல்லக்கொரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் அபாயகரமாக உள்ள மரங்களையும், அவைகளை வெட்டி அகற்றும் பணிகளையும், மணிஹட்டி – மீக்கேரி செல்லும் சாலையில் மழை நீரில் அரிப்பு ஏற்பட்டு சாலை உடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டார். சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், சாலையோரங்களில் மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சாலை சேதமடைவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து, அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் கடந்த  3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இது வரை பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்ைல. ஒரு சில இடங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீக்கேரி செல்லும் சாலையில் மழையால் சாலை உடைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவாதல், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 456 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆபத்து நிறைந்த மரங்களை, குறிப்பாக பள்ளிகள் அருகேயுள்ள மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் மழை நீர் கால்வாய் தூர் வாரப்பட்டு பாதிப்பு ஏற்படாதவாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. நேற்று காலை முதலே மழை பெய்ய துவங்கிய நிலையில் அவ்வப்போது மழையின் வேகம் அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மேலும், மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை கண்டி பகுதியில் அபாயகர நிலையில் காணப்பட்ட 2 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. நேற்றும் கல்லக்கொரை அரசுப்பள்ளி அருகே விழும் நிலையில் இருந்த மரங்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வெட்டி அகற்றினர். இதேபோல், நஞ்சநாடு அருகே கப்பத்தொரை பகுதியில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் நெடுஞ்சாலைதுறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். முத்தொரை அருகே சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு நெடுஞ்சாலைதுறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்….

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்

யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம்