மாவட்டத்திற்கு ஒரு மகளிர் காவல் நிலையம் ஒரு ஸ்டேஷனுக்கு 3 பெண் எஸ்ஐ.கள்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: நாடு முழுவதும் காவல் துறையில் பெண்களுக்கு பணியிடங்கள் 33 சதவீதமாக உயர்த்துவது உட்பட பல்வேறு பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழு செய்துள்ளது. காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான, உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:* காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை 10.3 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்ந்த வேண்டும். * இதற்காக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையமாவது நிறுவப்பட வேண்டும். * காவல்துறையில் பெண்களின் சதவீதத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, பெண்களுக்கு சவாலான பணிகளையும் வழங்க வேண்டும். * ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தது 3 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் காவலர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது….

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்