மாற்று இடம் வழங்கிய பின்னரே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அரசுக்கு

சென்னை: மாற்று இடம் வழங்கிய பின்னரே நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை வரவேற்கிறேன். ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவதற்கு முன்பு, அங்கு வசிக்கும் மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான மாற்று இடத்தையும் ஏற்படுத்தி தரவேண்டியது தமிழக அரசின் கடமை. அதே சமயம் பொதுமக்களும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து தாங்களாகவே வெளியேறி, தமிழக அரசு ஒதுக்கும் இடங்களில் குடியேற வேண்டும். அப்போதுதான் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்க முடியும். எதிர்காலத்தில் மழைநீர் வீடுகளில் புகுவதை தடுக்க முடியும். அண்டை மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தும் நிலையும் மாறும். எனவே மழைநீரை சேமித்து வைக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை