மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ஆளுமை பயிற்சி

 

பழநி, ஜூன் 11: பழநியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி நடந்தது. பயிற்சியில் காப்பக மாணவர்கள், நகர்ப்புற பள்ளிகளை சேர்ந்த 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்கள் என 50 பேர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் தொடர்பான பயிற்சியுடன் கைவேலை, வீட்டு சாதன அழகு கலைப்பொருட்கள், மெழுகுவர்த்தி தயாரித்தல் ஆகியவை
கற்றுக் கொடுக்கப்பட்டது. பயிற்சியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்