மாற்றுத் திறனாளி மாணவருக்கு ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள மின்சார இரு சக்கர வாகனம்

 

கோவை, அக்.7: கோவை வேளாண் பல்கலையில் பயிலும் மாற்றுத்திறனுடைய மாணவருக்கு தனியார் நிறுவனம் சார்பாக ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள மின்சார இரு சக்கர வாகனத்தை கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி அப்பல்கலையில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்நகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது:

பல்கலைக் கழகத்திற்கான கல்வியின் தரம் அதன் தலைவர்களைக் பொருத்தே அமையும். அந்த வகையில் வேளாண் பல்கலை துணை வேந்தர் தங்களின் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தில் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறார். இப்பல்கலை வளாகத்தில் வாகனங்களின் புகை மற்றும் மாசற்ற இடமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் இந்த இடத்தை மாசற்ற வாகனங்கள் பயன்படுத்தும் இடமாக அமைத்திட நடைபயிற்சி மற்றும் மிதிவண்டிகள் பயன்படுத்த வேண்டும். எஸ்ஆர்எஸ் குரூப் ஆப் கம்பனி பள்ளி கட்டிடங்கள் கட்டுவது, மின்சார இருசக்கர வாகனங்களை வழங்குவது என பல சேவைகளை செய்து வருகிறது. பல மாநிலங்களின் பல்வேறு நிறுவனங்களுக்கு மின்சார இரு சக்கர வாகனங்கள் கோவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தில் இந்தியாவிலேயே சிறந்த பணி செய்வதற்காக இந்த வருடம் தேசிய விருதில் முதல் பரிசு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அரியலூரில் 3 புதிய சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை. வேந்தர் சீனிவாசனுக்கு ஜமாலியன்-2024 விருது: திருச்சியில் 11ம் தேதி வழங்கப்படுகிறது

உடையார்பாளையம் அருகே தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டாசில் கைது