மாற்றுத்திறனாளி மூதாட்டி ரூ.2 கோடி வரிபாக்கி: ஐ.டி. நோட்டீசால் அதிர்ச்சி

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்தி நகரில் வசிப்பவர் குல்ஜார் (62). மாற்றுத்திறனாளியான இவர் தனது கணவர் இறந்த பின்னர் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டிற்கு காரில் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் சென்னை தாம்பரத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலக சரிபார்ப்பு பிரிவில் இருந்து வருவதாகவும், நீங்கள் ஐஎஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், உங்களது பான் எண் கொண்ட கணக்கில் 2020-21ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் ரூ.2 கோடி வரை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்து நோட்டீஸ் வழங்கினர்.மேலும் இந்த நோட்டீஸ் பெற்ற 3 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினர். இதைக்கேட்ட குல்ஜார் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். குல்ஜார் பான் எண்ணை யாரோ மர்மநபர்கள் பயன்படுத்தி போலியாக ஜிஎஸ்டி கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் குல்ஜார் நேற்று மாலை புகார் கொடுத்தார். அதில் எனது பெயரில் போலி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டை சேர்ந்த ஒரு பெண், ஆம்பூர் அடுத்த மிட்டாளத்தை சேர்ந்த ஒரு ஷூ கம்பெனி பெண் தொழிலாளி ஆகியோர் பெயரிலும் இதேபோல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….

Related posts

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி