மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்

சேலம், பிப்.23: சேலத்தை அடுத்துள்ள காரிப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது கொண்ட மாற்றுத்திறனாளி பெண், தனது வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு தந்தையின் நண்பரான அனுப்பூர் பகுதியை சேர்ந்த நேரு என்பவர் அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். அவர், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுபற்றி தனது பெற்றோரிடம் அப்பெண் கூறியுள்ளார். உடனே பெற்றோர், சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, நேரு மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு