மாற்றுத்திறனாளி தர்ணா

 

திண்டுக்கல், ஜூன் 17: பழநி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). மாற்றுத்திறனாளி. பட்டதாரியான இவர் நேற்று திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக சர்வீஸ் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தியதில், அரசு வேலை இல்லாவிட்டாலும், தனியார் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவரை அனுப்பி வைத்தார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்