மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ கணிப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில், 1 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பார்வை, செவித்திறன், கை, கால் இயக்கம், அறிவுத்திறன் வளர்ச்சி, ஆட்டிசம் உள்பட 26 வகை குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் கலந்து கொண்டு, மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார். இதில், உத்திரமேரூர் வட்டத்தில் 194 குழந்தைகள் கலந்து கொண்டு, சிகிச்சை பெற்று, மாற்றுத்திறனாளி குழந்தைகளில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு