மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க உதவிய பொதுமக்கள்

திருவாரூர் : திருவாரூர் தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாகள் வாக்களிப்பதற்கு பொதுமக்கள் உதவி செய்தனர்.திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கமுக்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பொதுமக்கள் வாக்குப்பதிவு துவங்கியவுடன் காலையிலேயே நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதேபோல் முகந்தனூர், வண்டாம்பாளையம், புலிவலம், அலிவலம், வேலங்குடி, மாங்குடி, திருநெய்ப்பேர், பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை உட்பட பல்வேறு ஊரக பகுதிகளில் பொது மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மேலும் திருவாரூர் நகரில் தனியார் மேல்நிலை பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் போன்றவற்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையங்களில் வாக்களித்தனர். மேலும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில் முதியவர் ஒருவர் வீல் சேரில் அழைத்து வரப்ப்பட்டு வாக்களித்தார்.திருவாரூர் நகரில் சைவபிரகாசா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்த மாற்றுதிறனாளி ஒருவருக்கு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் உதவி செய்தனர்.நன்னிலம்:திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (48) என்ற மாற்றுத்திறனாளி வாக்காளர் ஒருவர் தனது வாக்கை பதிவு செய்த செய்ய ஒரு ஆட்டோவில் வந்தார் ஆனால் அவரை வாக்குச் சாவடிக்குள் அழைத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாற்றுத்திறனாளி வாக்காளரைஅங்கு இருந்த நாற்காலியில் அமர வைத்து ஆட்டோ டிரைவரும் அங்கே நின்றவர்களும் வாக்குச் சாவடிக்குள் தூக்கி சென்று வாக்களிக்க வைத்தனர்.இந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்தபடி தபால் மூலம் வாக்களிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் இவரை தேர்தல் அலுவலர்கள் இவருக்கு தபால் வாக்குக்கு தேர்வு செய்யாதது அதனைப் பார்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

Related posts

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்