மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.15.81 லட்சத்தில் 19 பேருக்கு ஸ்கூட்டர்கள்: அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்

ஆவடி: திருவள்ளூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 19 பேருக்கு ஸ்கூட்டர்களை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பைக் வழங்கும் விழா ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு, ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். பின்னர், அவர் 15 மாற்று திறனாளிகளுக்கு தலா ₹78,850 மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களையும், முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ₹99,777 மதிப்பிலான பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் வழங்கினார். ஆக மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹15,81,858 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பைக் வழங்கப்பட்டது. மேலும், ஆவடி பஸ் நிலையம் அருகில் நரிக்குறவர் காலனியில் ₹20 லட்சம் மதிப்பில் சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் ஆவடி நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் ஆவடி பஸ் நிறுத்தத்தில் ₹9 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தையும் திறந்துவைத்தார். தொடர்ந்து,  ஆவடி காமராஜர் நகர் ம.பொ.சி தெரு, ஸ்ரீதேவி நகர், கோயில் பதாகை – கிருபா நகர், திருமுல்லைவாயல் – எட்டியம்மன் நகர், கவரப்பாளையம் – விநாயகர் கோவில் தெரு, பட்டாபிராம், சிரஞ்சீவி நகர் ஆகிய 6 இடங்களில் தலா ₹3.5 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 6 மின்மாற்றிகளை அமைச்சர் நாசர் இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆல்பி  ஜான் வர்கீஸ், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் பிரகாஷ், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் மேலாண்மை இயக்குநர் சுப்பையன், ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை கூடுதல் ஆணையர் சந்திரசேகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆவின் பொதுமேலாளர் ஜெயக்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் சத்தியசீலன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, ஆவடி கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்சன், உதவி பொறியாளர்கள் முருகன், சதீஷ், மனோகரன், தேவராஜ், மாநகர திமுக செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்