மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்: காஞ்சி கலெக்டர் பங்கேற்பு

 

காஞ்சிபுரம், செப்.2: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். முகாமில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலருடன் கலந்துக்கொண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வேண்டியும், செயற்கை கை மற்றும் கால்கள் வேண்டியும், மூன்று சக்கரவண்டி மற்றும் சொந்த தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகள் கோரியும் 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் அளித்த மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான வசதிகள் செய்து தரும்படி மாற்றுத்திறனாளி அலுவலரிடம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்