மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி

 

நாகப்பட்டினம், அக்.17: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 207 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர்.

பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தபபட்ட அலுவலர்களுக்கு ஜானிடாம்வர்கீஸ் அறிவுறுத்தினார். மேலும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,500 மதிப்புள்ள காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கார்த்திகேயன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி