மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி: நாளை நடக்கிறது

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு போட்டிகள் நாளை (19ம் தேதி) காலை 10 மணியளவில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. தடகள போட்டியில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கை ஊனமுற்றோர் 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானவர் 50 மீட்டர் ஓட்டம், கால் ஊனமுற்றோர் குண்டு எறிதல், இரு கால்களும் ஊனமுற்றோர் 100 மீட்டர் சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், மிக குறைந்த பார்வையற்றோர் 100 மீட்டர் ஓட்டம், மிக குறைந்த பார்வையற்றோர் நின்ற நிலையில் தாண்டுதல், முற்றிலும் பார்வையற்றோர் குண்டு எறிதல், மிகக் குறைந்த பார்வையற்றோர் சாப்ட் பால் போன்ற போட்டிகளும் நடைபெறுகிறது. மேலும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், புத்தி ஸ்வாதீனம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், புத்தி சுவாதீனம் முற்றிலும் இல்லாதவர்களுக்கு சாப்ட் பால் எறிதல், மூளை நரம்பு பாதிக்கபட்டவர்களுக்கு நின்ற நிலையில் தாண்டுதல், புத்தி சுவாதீனம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு குண்டு எறிதல் போன்ற போட்டிகள் மற்றும் காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் குழு போட்டிகளான பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால் கபடி நடத்தப்பட உள்ளது. எந்த பிரிவில் கலந்துகொள்கிறார் போன்ற விவரங்கள் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை dsotvlr@gmail.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 7401703482 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்ப வேண்டும். எனவே விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் உரிய நேரத்தில் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி