மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு போட்டிகள்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் 100 மீட்டர் ஓட்டம், 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, நின்ற நிலை தாண்டுதல், சாப்ட் பால் எறிதல், 200 மீட்டர், 400 மீட்டர் இறகுப்பந்து, மேசைப்பந்து, கபடி, வாலிபால் ஆகிய பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அருணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்