மாற்றுதிறனாளிகள் பேரவை கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நல்லூர் கிராமத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், அலுவலகம் திறப்பு விழா மற்றும் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சேகர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் முனுசாமி, வார்டு உறுப்பினர் குணசேகரன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாநில செயலாளர் ஜீவா கலந்துகொண்டு, மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தினை திறந்து வைத்து, பேரவை கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சியில் உத்திரமேரூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல, கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக்க வேண்டும், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகள் செல்ல ஏதுவாக சக்கர நாற்காலி வைத்திட வேண்டும், சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம் ரூ.3000, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை