மார்க்கெட் கழிப்பிடத்தை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, மார்ச் 16: ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மளிகை, காய்கறி, இறைச்சி உட்பட அனைத்து வகையான கடைகளும் இங்கு உள்ளன. இதனால், உள்ளூர் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து நாள் தோறும் பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் வந்துச் செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி மார்க்கெட்டில் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அதனை முறையாக பராமரிக்காத நிலையில், இந்த கழிப்பிடங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால், அவசர தேவைகளுக்கு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும். மேலும், இலவச சிறுநீர் கழிக்கும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை