மாரியம்மன் ேகாயில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி, ஜூன் 14: நல்லம்பள்ளி வன்னியர் தெருவில் உள்ள செல்வகணபதி, ஊர் மாரியம்மன், பழனி ஆண்டவர், ஊர் முனியப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. புற்று மண் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து முதற்காலயாக பூஜை, 2ம் கால யாக பூஜை, 3ம் கால யாகபூஜை, 4ம் கால யாக பூஜை, 5ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம், விமான கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர், சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 48 நாட்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து