மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

 

பாலக்கோடு, மே 4: மாரண்டஅள்ளி அடுத்த சாமனூர் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர், மாரியம்மன், கொல்லாபுரி மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்ததை அடுத்து, கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 2ம்தேதி கொடியேற்றி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலச தீர்த்தத்தை பட்டாச்சாரியர்கள், ஊர் கவுண்டர் சாமனூர் குமார் தலைமையில் எடுத்துச்சென்று, கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.இதனையடுத்து வரசித்தி விநாயகர், மாரியம்மன், கொல்லாபுரி மாரியம்மன், நவகிரக விக்ரகங்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்