மாரியம்மன் கோயில் திருவிழா

 

மேட்டூர், மே 4: கூலையூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் கரகம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேட்டூர் அருகே உள்ள கூலையூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. கூலையூர் சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த கோயிலில் வழிபட்டு செல்வது வழக்கம். இரண்டு வாரங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன் மாரியம்மன் திருவிழா தொடங்கியது. நேற்று வேண்டுதல் வைத்த பக்தர்கள் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னி கரகம், மாவிளக்கு ஏந்தியும் ஊர் கிணற்றிலிருந்து மாரியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேள, தாளம் முழங்க வான வேடிக்கையுடன் இளைஞர்கள் நடனமாடியும், சிலம்பம் சுற்றியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர் கிணற்றிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், மாரியம்மன் கோயிலை அடைந்தது. நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் வெங்கட்ராமன், ஊர் பெரிய வீட்டுக்காரர் ராஜா, கோவிந்தராஜ், சிவக்குமார் குணசேகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், மணிவண்ணன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்