மாரியம்மன் கோயிலில் நகை, பணம் திருட்டு

போச்சம்பள்ளி, ஜூன் 10: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கருப்பேரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு, நேற்று காலை ஊர்கவுண்டர்கள் மாணிக்கவாசம், ராஜப்பன் ஆகியோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி மற்றும் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்