மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

திருவாடானை, ஜூலை 31: திருவாடானை சினேகவல்லிபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. எட்டாம் திருநாளான நேற்று பெரிய கோவில் முன்பு உள்ள ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் இருந்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் விரதமிருந்து பால் காவடி, வேல் காவடி, பறவை காவடி மற்றும் பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர். பின்னர் சினேகவல்லிபுரம் மாரியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி