மாயனூர் காவிரி கதவணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

கிருஷ்ணராயபுரம், ஜூலை 31: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாத கண்டித்து மாயனூர் நீர் வளத்துறை பிரிவு அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒருங்கிணைப்பு குழு செயலாளர். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐஎம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சக்திவேல், கந்தசாமி ஆகியோர் பேசினர்.

மாயனூர் கதவணை திட்டத்திற்கு 2008 ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு நீர் வளத்துறையினர், வருவாய் துறையினர் இழப்பீடு தொகை வழங்கப்படாததை கண்டித்தும், கூடுதல் இழப்பீடு தொகை மற்றும் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நாகராஜன், நடேசன், கரிகாலன் ஒருங்கிணைப்பு கமிட்டி உறுப்பினர்கள், கதவணைக்கு நிலம் வழங்கிய 38 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி