மாமல்லபுரம் பூங்கா அருகே குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்: பேரூராட்சி ஊழியர்கள் தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண் வளம் மீட்பு பூங்கா உள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை, வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு சென்று, அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. அதிகளவில் குப்பையை தேக்கி வைக்க இடம் இல்லாததால், அருகே காலியாக உள்ள அரசு நிலத்தில் குப்பையை கொட்டி பராமரித்து வந்தனர்.அந்த அரசு நிலத்தின் அருகில், தனியாருக்கு சொந்தமான வீட்டுமனை பிரிவுகள் உள்ளன. இங்குள்ள வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதில், அருகில் உள்ள பங்கிங்காம் கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது என கூறப்பட்டது. இந்த, வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 3 மாதங்களில் குப்பை முறையாக அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து, குப்பையை தரம் பிரிக்கும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி.நானே, நீதிமன்ற ஆணையராக நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து, கடந்த 9ம் தேதி வழக்கறிஞர் நானே, மேற்கண்ட பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து, குப்பை பிரிக்கும் தற்போதைய நிலை, கால்வாயில் இருந்து எவ்வளவு தூரத்தில் குப்பை கிடங்கு உள்ளது. பக்கிங்காம் கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதுதொடர்பான அறிக்கையை அவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை பிரிக்கும் இடம் கால்வாயின் கிழக்கு பகுதியில் உள்ளது. பக்கிங்காம், கால்வாயின் அருகே, கடந்த 2008ம் ஆண்டு முதல் இயங்கும் வளங்களை மீட்கும் பூங்கா முழுவதும் குப்பை உள்ளது. பக்கிங்காம் கால்வாயின் கிழக்கு பகுதியில், குப்பைகள் கொட்டுவதால் தண்ணீரின் நிறம் மாறியுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பையை, பேரூராட்சி ஊழியர்களை வைத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, லாரிகளில் ஏற்றி சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஆப்பூர் குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, நவீன இயந்திரம் மூலம் குப்பைகளை சிறிய துண்டுகளாக வெட்டி பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை