மாமல்லபுரம் சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் இசிஆர் சாலையில் தொடர் விபத்து: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை தனியார் ரிசார்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதால் தொடர் விபத்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் இருந்து  புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணி நடந்தபோது, சாலை ஓரமாக இருசக்கர வாகனம் செல்வதற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது.  அப்போது, ஒரு தனியார் ரிசார்ட் நிர்வாகம்,  சர்வீஸ் சாலை அமைத்தால் எங்கள் ரிசார்ட் வருபவர்களுக்கு இடையூறு ஏற்படும் என சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும்,  ரிசார்ட் நிர்வாகத்தால் கையூட்டு கொடுக்கப்பட்டதால் அந்த இடத்தில் மட்டும் சாலை அமைக்காமல் விடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதனால், அந்த இடத்தில் மட்டும் தற்போது வரை சர்வீஸ் சாலை இல்லை. மேலும், அந்த தனியார் ரிசார்ட் நிர்வாகம் கிழக்கு கடற்கரை சாலையை 6 சென்ட் அளவிற்கு ஆக்கிரமித்து நுழைவு வாயில், பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 50க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாம்.   இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்  நேரில் சென்று ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு