மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தரையில் கிடக்கும் மின் வயர்கள்: l விபத்து அச்சத்தில் சுற்றுலா பயணிகள் l நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம், மார்ச் 15: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் மின் வயர்கள் தரையில் கிடக்கின்றன. இதனால், விபத்து ஏற்படுமே என்ற அச்சத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகப் புகழ் வாய்ந்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்கள் பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்ந்து வருகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்குள்ள, புராதன சின்னங்கள் மீது ஈர்ப்பு கொண்டு கடந்த, 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி – சீன நாட்டு அதிபர் ஜின்பிங் ஆகியோர் அரசு முறை பயணமாக மாமல்லபுரத்தில் சந்தித்துக்கொண்டனர்.

பின்னர், பல்வேறு முக்கிய அரசு கோப்புகளில் கையொப்பமிட்டனர். முன்னதாக, இரு நாட்டு தலைவர்கள் வருகையொட்டி புராதன சின்னங்கள் மற்றும் வளாகங்களில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அழகிய தோற்றத்தில் காட்சி அளித்தது. இந்நிலையில், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்கின்றனர். அதனால், கடந்த 2022ம் ஆண்டு கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், கணேச ரதம், வெண்ணெய் உருண்டை பாறை வளாகங்களில் தொல்லியல் துறை நிர்வாகம் சார்பில் இரவை, பகலாக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் கண்டுகளிக்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்இடி விளக்குகள் பாதுகாப்பாக பொருத்தப்பட்டன. அவை தற்போது வரை பிரகாசமாக எரிகிறது.

இந்நிலையில், கடற்கரை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்ட மின்சார வயர்கள் சுற்றுலா பயணிகள் நடந்து வரும் பாதையில் தாறுமாறாக பிஞ்சி விபத்து அபாயத்தில் தரையில் கிடக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கிறது. இத்தகைய பராமரிப்பு குறைபாட்டால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.

இது குறித்து மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக தரையில் கிடக்கும் மின் வயர்களை பிரித்து எடுத்து பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் அலட்சியமாக செயல்படுவதாக சுற்றுலா பயணிகள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். எனவே, தொல்லியல் துறை உயரதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, கடற்கரை கோயில் வளாகத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக கிடக்கும் மின் வயர்களை உடனடியாக அகற்றி முறையான பாதுகாப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளிநாட்டு பயணி ஒருவர் கூறுகையில், ‘மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஏராளமான வெளிநாட்டினர் தங்களது குழந்தைகளோடு வருகின்றனர். அப்படி, வருபவர்கள் கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க தொல்லியல் துறையினர் அனுமதிக்கின்றனர். கடற்கரை கோயிலை மட்டும் சுற்றி பார்க்க இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அங்கு பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகளில் இருந்து செல்லும் மின் வயர்கள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

n கடற்கரை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்ட மின்சார வயர்கள் சுற்றுலா பயணிகள் நடந்து வரும் பாதையில் தாறுமாறாக பிஞ்சி விபத்து அபாயத்தில் தரையில் கிடக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கிறது. இத்தகைய பராமரிப்பு குறைபாட்டால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.

n கடற்கரை கோயில் வளாகத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்கின்றனர். அதனால், கடந்த 2022ம் ஆண்டு கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், கணேச ரதம், வெண்ணெய் உருண்டை பாறை வளாகங்களில் தொல்லியல் துறை நிர்வாகம் சார்பில் இரவை, பகலாக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் கண்டுகளிக்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்இடி விளக்குகள் பாதுகாப்பாக பொருத்தப்பட்டன. அவை தற்போது வரை பிரகாசமாக எரிகிறது.

Related posts

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது: எஸ்.பி. சாய்பிரனீத் பேட்டி

குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்