மாமல்லபுரம் அருகே பண்ணையில் செத்து மிதந்த 4 டன் இறால்கள்; போலீசார் விசாரணை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இறால் பண்ணையில் இரண்டு பாத்திகளில் 4 டன் இறால்கள்  திடீரென செத்து மிதந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் விஷம் வைத்ததால்  இறால்கள் செத்து மிதந்தா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்குட்பட்ட கொக்கிலமேடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் குணசேகரன் (49). இவர், அங்குள்ள பக்கிங்ஹாம் கால்வாய் ஓரம் பண்ணை வைத்து இறால்கள் வளர்க்க ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏலம் எடுத்தார். பின்னர், அங்கு பண்ணை வைத்து, இரண்டு பாத்திகளில் 4 டன் இறால் குஞ்சுகளை கொண்டு வந்து வளர்த்தார். அங்கு, காவலாளியாக பகலில் 2 பேரும், இரவில் 5 பேர் என மொத்தம் 7 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குணசேகரனின் அண்ணன் மகன் லோக அமிர்தநாதன் காவலுக்கு இருந்துள்ளார். பின்னர், நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து டார்ச் அடித்து பார்த்த போது, 2 பாத்திகளில் வளர்ந்த இறால்கள் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இது குறித்து தகவலறிந்த குணசேகரன் கொக்கிலமேடு மீனவர் குப்பம், வெண்புருஷம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோருடன் சென்று பார்த்த போது, செத்து மிதந்த இறால்களை பார்த்து வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு தரையில் அழுத புரண்ட காட்சி பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. அப்போது, இறால் பண்ணைக்கு அருகே விஷ பாட்டில் கிடந்ததால் விஷம் வைத்து கொள்ளப்பட்டதா என சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து, செத்து மிதந்த இறால்களை இரண்டு பெரிய பள்ளங்கள் தோண்டி புதைத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து குணசேகரன் 4 டன் இறால்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டுமென புகார் மனு கொடுத்தார். இதையடுத்து, மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, தண்ணீரில் மர்ம நபர்கள் யாராவது விஷம் கலந்தார்களா? அல்லது வேறு காரணத்தால் இறால்கள் செத்து மிதந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாமல்லபுரம், அருகே இறால் பண்ணையில் 2 பாத்திகளில் வளர்த்த 4 டன் இறால்கள் திடீரென செத்து மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, இறால்கள் வளர்த்த குணசேகரன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கு இறால்கள் வார்க்க குத்தகை எடுத்தேன். மேலும், தூரத்து உறவினர்கள், தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து வட்டிக்கு பணம் வாங்கியும், தனது மனைவியின் நகைகளை அடகு வைத்தும், இறால் குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்தேன். ஆனால், நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தண்ணீரில் விஷம் கலந்ததால் 4 டன் இறால்கள் செத்து மிதந்தது. இதனால், வட்டிக்கு வாங்கி பணத்தை எப்படி திரும்ப கொடுக்க போகிறேன். இதில், கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை வழி நடத்தலாம் என நம்பி இருந்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. செத்து, மிதந்த இறால்களால் தனக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை