மாமல்லபுரத்தில் சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முன் ஏற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 28-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா். மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க இதுவரை 197 நாடுகள் பதிவு செய்துள்ளன.இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்திகிறார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோவை இன்று வெளியிடுகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையண்பு, அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறை செயலாளர், செஸ் ஒலிம்பியாட் குழுவினர் பங்கேற்க உள்ளனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை