மான் கறி விற்ற 3 பேர் கைது

சேலம், ஜூன் 26: சேலம் மாவட்டம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டி அருகேயுள்ள செங்கரடு பகுதியில் சிலர் மான்களை வேட்டையாடி கறி விற்பனை செய்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் மற்றும் வன பாதுகாப்பு படையினர் நேற்று, செங்கரடு சென்று தீவிர சோதனை நடத்தினர். அதில், மான் கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த சண்முகம் (38), மணி (55), சரவணகுமார் (23) ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5கிலோ மான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் எந்த வனப்பகுதிக்கு சென்று மான் வேட்டையில் ஈடுபட்டார்கள்?, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி