மானூர் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தவரின் வீடியோ வைரல்

நெல்லை, ஆக.27: மானூர் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெல்லை அருகே உள்ள மானூர் காவல் நிலையத்தித்திற்கு தினசரி புகார்தாரர்கள், வக்கீல்கள் புகார் மனுக்கள் தொடர்பாக தினசரி வந்து செல்வார்கள். அவர்கள் காத்திருப்பதற்காக காவல் நிலையத்தில் ஒருபகுதியில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் காத்திருந்து போலீசாரை சந்தித்து விட்டு புகார் மனு கொடுத்துவிட்டுச்செல்வது வழக்கம்.

இந்தநிலையில் மானூர் காவல் நிலையத்திற்கு சமீபத்தில் பைக்கில் சென்ற நபர் பைக்கை ‘பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி விட்டு அந்த பைக்கின் மீது அமர்ந்து காத்திருந்தார். இதைப்பார்த்து அங்கு சென்ற போலீசார் பார்க்கிங் பகுதியில் இருக்க வேண்டாம் புகார்தார்கள் காத்திருக்கும் பகுதியில் அமருங்கள் என கூறியுள்ளார். இதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்தார். அப்போது போலீஸ்காரர் ஒருவர் ‘‘காவல் துறை அதிகரிகள் செல்லும் வழியில் பைக்கில் கால் மேல் போட்டு அமரக்கூடாது’’ என கண்டித்தார். இதனால் போலீசாருக்கும், அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அந்த நபர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்