மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

மானாமதுரை,ஏப். 20: மானாமதுரை வீரஅழகர் கோயிலில் சித்திரை திருவிழா நேறறு காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.  சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குள்பட்ட இக்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக கோயில் பட்டர் கோபிமாதவன் மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கு காலை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் வீர அழகருக்கும் காலை 5 மணிக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது.

அதன்பின் உற்சவர் வீரஅழகருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் இரவு வீர அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அழகர் எதிர்சேவை வரும் 22ம் தேதி நள்ளிரவு நடைபெறும். மறுநாள் 23ம் தேதி காலை வைகை ஆற்றுக்குள் அழகர் இறங்கும் உற்சவமும் நடைபெறுகிறது. அதன்பின் 24ம் தேதி இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் தசாவாதார நிகழ்ச்சியும், வைகை ஆற்றுக்குள் நிலாச்சோறு சாப்பிடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Related posts

பொதுக்கூட்டம்

பள்ளி மாணவி மாயம்

கம்பத்தில் நகர் மன்ற கூட்டம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்