மானாமதுரையில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

மானாமதுரை, செப்.29: மானாமதுரை நகராட்சி சார்பில் உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறையும் மானாமதுரை நகராட்சியும் இணைந்து கால்நடை மருத்துவமனையில் ரேபீஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விழாவின் துவக்கமாக உலக ரேபீஸ் நோய் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

அவற்றை கால்நடை மருத்துவர் விக்னேஷ் பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினார். இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, ஆணையாளர் ரெங்கநாயகி, நகர்மன்ற துணைதலைவர் பாலசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், சுகாதார ஆய்வாளர் ராமநாதன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரினி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், கால்நடை மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு