மானாமதுரையில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: ரூ.6 லட்சம் தப்பியது

 

மானாமதுரை, ஆக.22: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட புறநகரான கண்ணார் தெரு பகுதியின் அருகில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு சென்றனர். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர் ஒருவர் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த போலீசார் ஆய்வு செய்தபோது டாஸ்மாக் கடையில் தினசரி விற்பனை செய்த பணத்தை வைக்கும் லாக்கரை கொள்ளையர்கள் திறக்க முயற்சி செய்துள்ளனர்.

லாக்கரை உடைக்க முடியாத நிலையில் மதுபான பாட்டில்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். கடையின் சூப்பர்வைசர் பூமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.உடைக்கப்பட்ட டாஸ்மாக்கடையில் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை வங்கிவிடுமுறை என்பதால் இரண்டு நாள் விற்பனையான ரூ.6 லட்சத்து 41 ஆயிரத்து 662 பணம் இருந்துள்ளது. லாக்கர் உடைக்கப்பட்டிருந்தால் இந்த பணத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றிருப்பர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை