மாநில கிளியாந்தட்டு போட்டியில் தங்கபதக்கம் குமரி பெண்கள் அணிக்கு எஸ்பி பாராட்டு

நாகர்கோவில், பிப். 8: தமிழ்நாடு மாநில அளவில் சீனியருக்கான 20வது சேம்பியன்ஷிப் அட்யா-பட்யா(கிளியாந்தட்டு) போட்டிகள் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூரில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கு பெற்றன. குமரி மாவட்டத்தில் இருந்து பங்கு பெற்ற பெண்கள் அணியினர் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கமும் பரிசு கோப்பையும் வென்றனர். சாதனை படைத்த குமரி வீராங்கனைகள் மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளையும் கன்னியாகுமரி மாவட்ட அட்யா-பட்யா அசோசியேஷன் செயலாளர் ஜெயராஜ், தலைவர் அர்னால்டு, பெண்கள் அணி மேலாளர் ஷைனி மற்றும் பயிற்சியாளர் ஆதி விஷ்ணுகுமார் ஆகியோரையும் எஸ்பி பாராட்டினார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு