மாநில கராத்தே போட்டி: கோவை வீரர்கள் வெற்றி

 

கோவை, ஆக. 28: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா போட்டிகள் நடந்தன. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், கோவை புலியகுளம் தனியார் பள்ளியின் சார்பில் கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில், கராத்தே கட்டா பிரிவில் மூன்று தங்க பதக்கங்களையும், எட்டு வெள்ளி பதக்கங்களையும், இரண்டு வெண்கல பதக்கங்களையும் மற்றும் சிலம்ப பிரிவில் ஒற்றை கம்பு சுற்றுதல் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதில், 8 வயது பிரிவில் நிஷித், வர்ணவ் சாய், 10 வயது பிரிவு சாய் புல்லா ஆகியோர் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கராத்தே, சிலம்ப பயிற்சியாளர்களான ஆசிய கராத்தே நடுவர் ரென்சி.சிரில் வினோத், சென்சாய்கள் கோகுலகிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகியோருக்கு பள்ளியின் தாளாளர் ஆரோக்கிய ததேயுஸ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்