மாநில கராத்தே, சிலம்பம் போட்டி மாணவ, மாணவிகள் சாதனை மலேசியா போட்டிக்கு தேர்வு

திருமங்கலம், அக். 20: கடலூரில் உள்ள டிஎஸ்ஏ சார்பில் நடந்த 6வது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், திருமங்கலத்தினை சேர்ந்த 40 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கராத்தே கட்டா பிரிவில் திருமங்கலத்தை சேர்ந்த வேம்பரசன் தங்கேஸ்வரன், ஸ்வேதா ஆகியோர் முதல் பரிசையும், முகுந்தன், கார்த்திக், லோகேஸ்வரன் ஆகியோர் 2ம் பரிசையும் பெற்றனர். குமிட்டி சண்டை பிரிவில் முகுந்தன் முதல் பரிசையையும், கார்த்திக் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.

சிலம்பம் போட்டியில் முதல்பரிசை நிகிஷா , தருண் வைபவ், சந்தோஷ்குமார், ஜெயவீரபதி ஆகியோர் பெற்றனர். உதயமூர்த்தி, ருத்ரா, சேதுபதி ஆகியோர் 2ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கடலூர் எஸ்.பி பரிசுகளை வழங்கினார். இதில் சிலம்பாட்டத்தில் வெற்றி பெற்ற திருமங்கலம் மாணவ, மாணவிகள் மலேசியாவில் பிப்ரவரி 2024ல் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை உலக சோடோகன் அமைப்பின் தமிழ்நாடு செயலாளர் மாஸ்டர் பால்பாண்டி, பயிற்சியாளர்கள் சுபாஷ், முகமதுநவாஷ், விக்னேஷன், ஹரிஹரன், முகமதுஅஸ்கர் காயத்திரி ஆகியோர் பாராட்டினர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்