மாநில அரசுகளுக்கு வழங்க 20 கிரையோஜெனிக் டேங்கர்கள் இறக்குமதி

புதுடெல்லி: கொரோனா நோயாளி களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பற்றாக் குறை நிலவுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக மத் திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. பல்வேறு மாநி லங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் ஏற்றி் வருவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன. மேலும், வெளிநாடுகளில் இருந் தும் விமானப்படை விமானங் களின் மூலம் ஆக்சிஜன் ஏற்றி வரப்படு கிறது, இந்நிலையில், திரவ ஆக்சிஜனை ஏற்றி வருவதற்கான பாதுகாப்பு மிக்க கிரையோஜெனிக் டேங்கர்களை மாநில அரசுகளுக்கு வழங்க, மத்திய அரசு 20 டேங்கர் களை போர்க்கால அடிப்படையில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் மாநிலங்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கும் வகையில், 10 மெட்ரிக் டன், 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 கிரையோஜெனிக் டேங்கர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோகிக்க ஒதுக்கப்பட்டுள்ளன,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.* சரக்குடன் திரும்பிய பயணிகள் விமானம்ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு பயணிகளை ஏற்றி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, சிட்னியில் இருந்து இந்தியாவுக்கு பயணிகளை ஏற்றி செல்ல ஆஸ்திரேலியா அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இதனால், அந்த விமானம் அங்கிருந்து சரக்குகளை மட்டும் ஏற்றி கொண்டு நாடு திரும்பியது. ஏற்கனவே, மே 15ம் தேதி வரை இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது….

Related posts

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்