மாநகர பகுதியில் மேலும் 159 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு பகுதியில் தடுப்பு அமைத்து கண்காணிப்பு

நெல்லை : நெல்லை மாநகர பகுதியில், நேற்று மேலும் 159 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிப்பு பகுதிகளில் தடுப்பு அமைத்து சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  1641 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 293 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுபோல் தனியார் ஆய்வகங்களிலும் ஏராளமானோர் மேற்ெகாண்ட பரிசோதனையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 80 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக மாநகர பகுதியை சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டவுன் சுந்தரர் தெரு, தெற்கு ரதவீதி, தடிவீரன் கோயில் தெரு, புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு, டிஎம்சி காலனி, சிஎன்.கிராமம், பெருமாள்புரம் பொதிகை நகர், அன்புநகர் லக்கி காலனி,   மகாராஜநகர், விஎம் சத்திரம், வெங்கடேஸ்வரா நகர், மீனாட்சிபுரம் சியாமளா அம்மன் கோயில் தெரு, தச்சை பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது. நெல்லை  மாநகரில் 4 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒரே  பகுதியில் 3க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவியது உறுதிசெய்யப்பட்டால்  அந்த பகுதி மாநகராட்சியின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு  வரப்படுகிறது. அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டு எச்சரிக்கை விழிப்புணர்வு  பேனர்கள் கட்டப்படுகின்றன. மேலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நெல்லை  மீனாட்சிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று தடுப்புகள் அமைக்கப்பட்டன.  இதனை அப்பகுதி சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்தனர்.ரதவீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு கொரோனா  பரவலை தடுப்பதற்காக மாநகர் முழுவதும் மீண்டும் கிருமிநாசினி மருந்து  தெளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நேற்று காலை நெல்லை டவுன்  ரதவீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சாலைகளில் கனரக வாகனத்தில் ராட்சத  குழாய் பொருத்தப்பட்ட இயந்திரம் உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.  இதனை சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்….

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்