மாநகர காவல்துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகம் திறப்பு

 

கோவை, மார்ச் 8: கோவை மாநகர காவல்துறை சார்பில், சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது. இது, தற்போது, அதே வளாகத்தில், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தரை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர், குத்துவிளக்கு ஏற்றி, அலுவலக பணிகளை துவக்கி வைத்தார். விழாவுக்கு வருகை புரிந்த போலீஸ் கமிஷனருக்கு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில், துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர்கள் மகேஸ்வரன், ஆனந்த், சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, காளீஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு