மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணி மேயர், கமிஷனர் துவக்கி வைத்தனர்

 

மதுரை, பிப்.2: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் பெரியார் பேருந்து நிலைய பூங்கா பராமரிப்பு பணிகளை மேயர், கமிஷனர் நேற்று துவக்கி வைத்தனர். மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 31 மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் தினந்தோறும் பொதுமக்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் உடல் நலனை பேணி காப்பதற்கு நடைபயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். குழந்தைகள் தினந்தோறும் பூங்கா விளையாட்டு உபகரணங்களில் விளையாடி செல்கின்றனர்.

சுற்றுச்சூழல் பூங்காவினை தனியார் வங்கி சமூக பொறுப்பு நிதியின் கீழ் சிறப்பாக பராமரித்திட திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேயர் இந்திராணிபொன்வசந்த், கமிஷனர் மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்து பணிகள் நடப்பதை பார்வையிட்டனர். தொடர்ந்து மத்திய மண்டலம் வார்டு 76 பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் வங்கி பொறுப்பு நிதியின் கீழ் கழிப்பறைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சரவண புவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் சுரேஷ்குமார், ஷாஜகான், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், கார்த்திக், உதவிப்பொறியாளர்கள் சந்தனம், ஆறுமுகம், ஸ்டீபன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை