மாநகராட்சி பள்ளி ஆய்வகத்தில் தீ விபத்து: 3 கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்

 

ஈரோடு, மார்ச் 20: ஈரோடு இடையன்காட்டு வலசில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதன் தரைத்தளத்தில் ஹைடெக் கம்ப்யூட்டர் லேப் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பள்ளி நேரம் முடிந்த பின் வழக்கமான பணிகளை முடித்து கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் கதவை பூட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பள்ளியை திறந்து ஆசிரியர்கள், அதைத்தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வர துவங்கினர். அப்போது, பள்ளியின் ஹைடெக் கம்ப்யூட்டர் லேப்பில் இருந்து மின் ஒயர்கள் கருகிய நாற்றம் வீசியது. இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள் அந்த லேப்பினை திறந்த பார்த்தபோது, லேப் முழுவதும் கரும்புகை படர்ந்து, 3 கம்ப்யூட்டர்கள், மர மேஜைகள் எரிந்து நாசமாகி இருந்து.

இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் எரிந்து நாசமானதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்