மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு எந்த அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது: விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம்நிலை நகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு விதிகள், பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஜனவரி 17ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், எந்த புள்ளிவிவர ஆதாரங்களும் இல்லாமல் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்தல் நடத்த அனுமதித்தால், அது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தையே பாதிக்க செய்யும்.  எனவே, வார்டு ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து, வார்டுகளில் உள்ள பெண்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்தது என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலா அல்லது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலா என்பது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (பிப்ரவரி 3) தேதிக்கு தள்ளிவைத்தனர்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்