மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

கடலூர், பிப். 25: கடலூர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டும். இதே போல வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சிக்கு சுமார் ரூ.50 கோடிக்கு மேலாக வரி பாக்கி உள்ளது. இதனால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையரை கண்டித்து நேற்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், சாதாரண மக்கள் பாக்கி வைத்துள்ள ரூ.2000 முதல் ரூ.5000 வரை தொகைக்காக மாநகராட்சி ஊழியர்களை வைத்து, அசிங்கப்படுத்தி, குடிநீர் குழாய்களை கடப்பாரை மூலம் துண்டித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி வைத்துள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு, குறிப்பிட்ட ஒரு ஐந்து ஆறு, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பெயர்களை குறிப்பிட்டும், அவர்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது போல் உள்ள நபர்களை விட்டுவிட்டு, ஏழை எளிய மக்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள். இது குறித்து உங்களிடம் முறையிட்டால் முதலமைச்சரிடம் சென்று கூறுங்கள் என்று கூறுகிறீர்கள். இதற்கு முன் இருந்த ஆணையர் பொதுமக்களை மரியாதையாக நடத்தினார், என அந்த போஸ்டரில் இருந்து. ஆனால் இந்த போஸ்டரை யார் மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டினார்கள் என்று தெரியவில்லை. கடலூர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை