மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி, செப்.24: திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். திருச்சி மாநகராட்சியில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதி குடிநீர் தேவை, சாலை விளக்கு, சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் தொடர்பான வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட மாநகர மேயர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி தகுந்த ஆய்வுகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி வலியுறுத்தினார்.

கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி துணை கமிஷனர் பாலு, மண்டலத் தலைவர் துர்கா தேவி, நகர் நல அலுவலர் மணிவண்ணன், செயற் பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்