மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாநகராட்சியில் மாநகர பொறியாளர்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் மாநகராட்சி பகுதிகளில் செய்யப்படக் கூடிய புதிய பைப்லைன் அமைத்தல், புதிய கட்டிடங்களுக்கு வரைபடம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் டெண்டர் கொடுப்பது மற்றும் முடிந்த வேலைகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஆணைகள் வழங்குது நடந்து வருகிறது. நேற்று மாநகராட்சி பொறியாளர்கள் அலுவலக பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் எந்த ஆவணங்கள், ரொக்க பணம் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. மேலும் பொறியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதிலிருந்து சில ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இச்சோதனைக்கு முன்னதாக பொறியாளர் பிரிவு உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்