மாநகராட்சி அறிவியல் பூங்கா அமைக்க நிதி உதவி வழங்கியவர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு: கமிஷனர் மு.பிரதாப் திறந்து வைத்தார்

 

கோவை, செப். 15: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 68-வது வார்டுக்கு உட்பட்ட டாடாபாத் அழகப்பா செட்டியார் சாலையில் ரூ.20 லட்சம் செலவில் மாநகராட்சி அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியுதவி வழங்கியவர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. இதை, மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் திறந்துவைத்தார். அத்துடன், அறிவியல் பூங்காவை பார்வையிட்ட மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக, 86வது வார்டுக்கு உட்பட்ட கரும்புக்கடை பூங்கா நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.

வீடு வீடாக சென்று அபேட் மருந்து தெளிக்க உத்தரவிட்டார். பின்னர், உக்கடம் புல்லுக்காடு பகுதியில், மக்கும் குப்பைகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர் அகமது கபீர், மாநகர கல்வி அலுவலர் முருகேசன், உதவி கமிஷனர்கள் மகேஷ் கனகராஜ், பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர்கள் ஆண்டியப்பன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜன், சக்திவேல், கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணக்குமார், தனபாலன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்