மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம்

 

கோவை, செப். 12: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளாார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை